UPDATED : அக் 29, 2024 12:00 AM
ADDED : அக் 29, 2024 10:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:
ஆந்திர மாநிலம், நெல்லுாரைச் சேர்ந்தவர் விஷ்ணு சாய்ராம், 19, ஸ்ரீபெரும்புதுார் அடுத்த தண்டலத்திலுள்ள பொறியியல் கல்லுாரில் முதலாமாண்டு படிக்கிறார்.
இவரை ராகிங் செய்து வந்த நான்காமாண்டு மாணவர்கள், கடந்த 23ம் தேதி இவரை, பைக்கில் அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர். யாரிடம் இதுபற்றி கூறக்கூடாது என, மிரட்டியுள்ளனர்.
இது குறித்து விஷ்ணு சாய்ராம், தந்தை சுதிர்குமாரிடம் கூற, அவர் ஸ்ரீபெரும்புதுார் உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், நேற்று முன்தினம் புகாரளித்தார். இதன்படி, சம்பந்தப்பட்ட மாணவர்கள் ஆறு பேர் மீது வழக்கு பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.