பெற்றோர் ஆசிரியர் கழக நிதி ரூ.12.35 லட்சம் கையாடல் கல்லுாரி பணியாளர் மீது வழக்கு
பெற்றோர் ஆசிரியர் கழக நிதி ரூ.12.35 லட்சம் கையாடல் கல்லுாரி பணியாளர் மீது வழக்கு
UPDATED : மே 28, 2025 12:00 AM
ADDED : மே 28, 2025 10:25 AM
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அரசு உதவி பெறும் கல்லுாரி பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் ரூ.12.35 லட்சம் கையாடல் செய்ததாக அலுவலக பணியாளர் ராம் சிங் 29, மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இக்கல்லுாரியில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படித்து வரும் நிலையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் பல்வேறு செயல்பாடுகள் நடந்து வருகிறது.
இதன் தலைவராக கல்லுாரியின் முன்னாள் முதல்வர் வெங்கடேஸ்வரன், செயலாளராக பாஸ்கர், பொருளாளராக விஷ்ணு சங்கர் உள்ளனர்.
இந்நிலையில் கல்லுாரியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் வங்கி பரிவர்த்தனை செய்து வந்த அலுவலக பணியாளர் ராம்சிங், 2023 ஜூன் முதல் 2024 ஜனவரி வரை போலி கையெழுத்திட்டு காசோலை மூலம் ரூ.12 லட்சத்து 35 ஆயிரம் கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் மீது ராஜபாளையம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி ராம்சிங் மீது வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

