UPDATED : டிச 13, 2024 12:00 AM
ADDED : டிச 13, 2024 06:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு:
பெங்களூரு பாரதி நகர் போலீஸ் நிலைய ஏட்டு பைகம்பர் நடாப். சமீபத்தில் விளையாட்டு கோட்டாவில், எஸ்.ஐ.,யாக தேர்வு செய்யப்பட்டார். எஸ்.ஐ., தேர்வுக்காக, அவர் சமர்ப்பித்த பி.ஏ., பட்டப்படிப்பு சான்றிதழை சரி பார்க்க, மைசூரு பல்கலைக்கழகத்துக்கு, போலீஸ் பணியமர்ப்பு துறை அதிகாரிகளை அனுப்பி வைத்தனர்.
இந்த மதிப்பெண்ணை ஆய்வு செய்தபோது, இது போலி மதிப்பெண் சான்றிதழ் என்பது தெரியவந்தது. இதையடுத்து, விதான் சவுதா போலீஸ் நிலையத்தில், போலீஸ் பணியமர்ப்பு துறை அதிகாரிகள் புகார் அளித்தனர். ஏட்டு மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.