தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு பிப்ரவரி 15ல் துவக்கம்

சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு பிப்ரவரி 15ல் துவக்கம்

சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு பிப்ரவரி 15ல் துவக்கம்


UPDATED : நவ 21, 2024 12:00 AM

ADDED : நவ 21, 2024 03:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2024 12:00 AM ADDED : நவ 21, 2024 03:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:
சி.பி.எஸ்.இ., 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி துவங்கும் என நேற்று அறிவிக்கப்பட்டது.

சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் ஏராளமான பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் படிக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இதன்படி, நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை சி.பி.எஸ்.இ., நேற்று வெளியிட்டது. இதன்படி, 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 18ம் தேதியும், 12ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 4ம் தேதியுடன் நிறைவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான விரிவான அட்டவணையை சி.பி.எஸ்.இ.,யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.cbse.gov.in மாணவர்கள் பார்க்கலாம். 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை, 86 நாட்களுக்கு முன் சி.பி.எஸ்.இ., நிர்வாகம் வெளியிடுவது இதுவே முதல்முறை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us