சி.பி.எஸ்.இ., முடிவுகள்: 10, பிளஸ்2 தேர்வில் 95 சதவீத தேர்ச்சி
சி.பி.எஸ்.இ., முடிவுகள்: 10, பிளஸ்2 தேர்வில் 95 சதவீத தேர்ச்சி
UPDATED : மே 15, 2025 12:00 AM
ADDED : மே 15, 2025 11:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:
சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் மே 13ம் தேதி வெளியிடப்பட்டன. டில்லியில் 10, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் 95 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 95.18 ஆக இருந்தது. இதில் 96.71 சதவீத மாணவியரும் 93.76 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கிழக்கு டில்லி 95.6 சதவீத தேர்ச்சியும், மேற்கு டில்லி 95.7 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளதாக சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
10ம் வகுப்பு தேர்வை பொறுத்தவரையில், ஒட்டுமொத்தமாக 95.14 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 95.71 சதவீத மாணவியரும், 93.98 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேற்கு டில்லியில் 95.24 சதவீத தேர்ச்சியும், கிழக்கு டில்லி 95.07 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளன.