தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கதை சொல்லும் போட்டி

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கதை சொல்லும் போட்டி

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கதை சொல்லும் போட்டி


UPDATED : அக் 27, 2025 08:11 AM

ADDED : அக் 27, 2025 08:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2025 08:11 AM ADDED : அக் 27, 2025 08:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, பல்வேறு தலைப்புகளில் கதை சொல்லும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன .

மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், மூன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கான கதை சொல்லும் போட்டி, நவ., 6 முதல் துவங்க உள்ளது.

வகுப்பு வாரியாக கொடுக்கப்பட்டுள்ள தலைப்பில், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில், இரண்டு முதல் நான்கு நிமிடங்கள் வரை மாணவர்கள் கதைகளை கூறலாம்.

கதை சொல்லும் வீடியோவை, பள்ளி வாயிலாக, http://cbseacademic.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். முதலில், மண்டல அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும்.

தேசிய போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us