தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சி.பி.எஸ்.இ.,யின் மும்மொழிக் கொள்கை: தர்மேந்திர பிரதான் ஆதரவு

சி.பி.எஸ்.இ.,யின் மும்மொழிக் கொள்கை: தர்மேந்திர பிரதான் ஆதரவு

சி.பி.எஸ்.இ.,யின் மும்மொழிக் கொள்கை: தர்மேந்திர பிரதான் ஆதரவு


UPDATED : மே 30, 2026 10:18 AM

ADDED : மே 30, 2026 10:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 30, 2026 10:18 AM ADDED : மே 30, 2026 10:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:
சி.பி.எஸ்.இ., மும்மொழிக் கொள்கை தொடர்பாக அனுப்பிய சுற்றறிக்கைக்கு அதரவு தெரிவித்துள்ள மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், 6 முதல் 8 ம் வகுப்பு வரை மாணவர்கள் 3 மொழிகள் படித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திலும், தேர்வு முறையிலும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. ஜூலை 1 முதல் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படிக்கும் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று மொழிகள் படிப்பது கட்டாயம். மூன்றாவது மொழிக்கு பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வு கிடையாது என அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து சிலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது:

இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் என்ன சொல்கிறதோ அதனை பின்பற்றுவோம். 99 சதவீத சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரையில் ஏற்கனவே தாய்மொழியில் பாடம் கற்பிக்கப்படுகிறது. தற்போதைய சுற்றறிக்கை 9ம் வகுப்பிற்கும் அதனை ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

எனது மகளும், 8ம் வகுப்பு வரை 3வது மொழியாக மராத்தி மொழியை படித்தார். இந்தியாவில் தாய்மொழியில் படிப்பது என்பது அசாதாரணமானது அல்ல. தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழியில் படிப்பது ஊக்குவிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us