UPDATED : டிச 20, 2024 12:00 AM
ADDED : டிச 20, 2024 01:20 PM

இந்திய ராணுவம், கடல் படை மற்றும் விமான படை ஆகிய இந்திய பாதுகாப்பு படைகளில் தகுதியான அதிகாரிகளை தேர்வு செய்ய நடத்தப்படும் தேசிய அளவிலான தேர்வு, 'கம்பைண்டு டிபன்ஸ் சர்வீசஸ் எக்சாமினேஷன் - சி.டி.எஸ்.,'.
இத்தேர்வை, யு.பி.எஸ்.சி., எனும் 'யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்' நடத்துகிறது. தற்போது, பெண்களுக்கான 'சார்ட் சர்வீஸ் கமிஷன்' தொழில்நுட்பம் அல்லாத படிப்புகளுக்கான தேர்வை உள்ளடக்கிய சி.டி.எஸ்.,-1 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்களும், இடங்களும்:
* இந்தியன் மிலிட்டரி அகாடமி (ஐ.எம்.ஏ.,), டேராடூன் - 100 இடங்கள்* இந்தியன் நேவல் அகாடமி (ஐ.என்.ஏ.,), எழிமலா - 32 இடங்கள்* ஏர் போர்ஸ் அகாடமி (ஏ.எப்.ஏ.,), ஹைதராபாத் - 32 இடங்கள்* ஆபீசர்ஸ் டிரைனிங் அகாடமி (ஓ.டி.ஏ.,), சென்னை: எஸ்.எஸ்.சி., ஆண்கள் - 275 இடங்கள்* ஆபீசர்ஸ் டிரைனிங் அகாடமி (ஓ.டி.ஏ.,), சென்னை: எஸ்.எஸ்.சி., பெண்கள்- 18 இடங்கள்
மொத்த இடங்கள்:
457
தகுதிகள்:
* இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
* ஐ.எம்.ஏ., மற்றும் ஓ.டி.ஏ.,: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பெறப்பட்ட ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு. ஜனவரி 2, 2001க்கு முன்போ அல்லது ஜனவரி 1, 2007க்கு பிறகோ பிறந்தவராகவோ இருத்தல் கூடாது.
* இந்திய கடற்படை அகாடமி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பெறப்பட்ட ஏதேனும் ஒரு இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு. ஜனவரி 2, 2001க்கு முன்போ அல்லது ஜனவரி 1, 2007க்கு பிறகோ பிறந்தவராகவோ இருத்தல் கூடாது.
* இந்திய விமான படை: 10ம் மற்றும் 12ம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணிதப் பாடங்களுடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பெறப்பட்ட ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் ஒரு பொறியியல் பட்டப்படிப்பு. ஜனவரி 2, 2002க்கு முன்போ அல்லது ஜனவரி 1, 2006க்கு பிறகோ பிறந்தவராகவோ இருத்தல் கூடாது.
* தற்போது இறுதியாண்டு பட்டப்படிப்பு படித்திக்கொண்டிருப்பவரும் விண்ணப்பிக்கலாம். எனினும், இதுவரையில் 'அரியர்' நிலுவையில் இருத்தல் கூடாது.
விண்ணப்பிக்கும் முறை:
https://upsconline.gov.in/ எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு மையங்கள்:
நாடு முழுவதும் தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
டிசம்பர் 31
விபரங்களுக்கு:
https://upsc.gov.in/examinations/active-exams