sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

துாய்மையான சுற்றுச்சூழலுக்கான மையம்: வி.ஐ.டி., பல்கலை- திறப்பு

/

துாய்மையான சுற்றுச்சூழலுக்கான மையம்: வி.ஐ.டி., பல்கலை- திறப்பு

துாய்மையான சுற்றுச்சூழலுக்கான மையம்: வி.ஐ.டி., பல்கலை- திறப்பு

துாய்மையான சுற்றுச்சூழலுக்கான மையம்: வி.ஐ.டி., பல்கலை- திறப்பு


UPDATED : மே 06, 2024 12:00 AM

ADDED : மே 06, 2024 09:39 AM

Google News

UPDATED : மே 06, 2024 12:00 AM ADDED : மே 06, 2024 09:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
வி.ஐ.டி., பல்கலையில் துாய்மையான சுற்றுச்சூழலுக்கான மையத்தை, சென்னையில் உள்ள அமெரிக்க துணைத்துாதர் கிறிஸ் ஹோட்ஜஸ் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வி.ஐ.டி., நிறுவனர் வேந்தர் ஜி. விசுவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அமெரிக்க துணைத் துாதர் கிறிஸ் ஹோட்ஜஸ் பேசியது:

சென்னையில் உள்ள அமெரிக்க துணை துாதரகம் வி.ஐ.டி., பல்கலையுடன் நீண்ட நெடிய உறவை கொண்டுள்ளது. கல்வியை கட்டியெழுப்புவது மட்டுமல்ல, உறவை வலுப்படுத்தும் பணியை துவங்கியுள்ளோம். பல்வேறு நல்ல செயல்களை செய்வதற்கு எங்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு.

அமெரிக்க- இந்தியஉறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதில் நாம் வெற்றிபெற போகிறோம். நாம் எவ்வாறு கல்வி கற்கிறோம், எப்படி ஆராய்ச்சி செய்கிறோம் என்பது முக்கியம். சமூக அறிவியல், இயற்பியல், கணினி அறிவியல், வேதியியல், கட்டடக்கலை மற்றும் இயந்திர பொறியியல் போன்ற துறைகளில் ஒத்துழைப்பு அவசியம்.
இவ்வாறு அவர் பேசினார்.

வி.ஐ.டி., வேந்தர் ஜி.விசுவநாதன் பேசுகையில், அமெரிக்காவில் உள்ள பல்கலை கழகங்களில் ஏராளமான இந்திய மாணவர்கள் படிக்கின்றனர்.

வெளிநாட்டில் உயர்கல்விக்கான இறுதி இலக்கு அமெரிக்கா. 20ம் நுாற்றாண்டுக்கு பின் உலக அளவில் உயர்கல்வி என்றால், அமெரிக்கா என்ற நிலை உருவாகியுள்ளது. ஐ.நா., சபை ஏற்றுக்கொண்ட உலகளாவிய நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் தொடர்புபடுத்த துாய்மையான சுற்றுச்சூழலுக்கான மையம் துவக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலக அளவில் சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் நிலையான தீர்வுகளை கண்டறிவதில் இந்த மையம் கவனம் செலுத்தும் என்றார்






      Dinamalar
      Follow us