தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விருதுநகர் ஜவுளி பூங்கா பணிகளுக்கு ரூ.1894 கோடி ஒதுக்கியது மத்திய அரசு

விருதுநகர் ஜவுளி பூங்கா பணிகளுக்கு ரூ.1894 கோடி ஒதுக்கியது மத்திய அரசு

விருதுநகர் ஜவுளி பூங்கா பணிகளுக்கு ரூ.1894 கோடி ஒதுக்கியது மத்திய அரசு


UPDATED : ஜூலை 02, 2025 12:00 AM

ADDED : ஜூலை 02, 2025 08:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 02, 2025 12:00 AM ADDED : ஜூலை 02, 2025 08:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் அமையவுள்ள ஜவுளி பூங்காவிற்கு வளர்ச்சி மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.1894 கோடி ஒதுக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம், தெலுங்கானா, ம.பி., உள்ளிட்ட 7 மாநிலங்களில் ஜவுளி பூங்காக்கள் அமைக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் பி.எம்., மித்ரா ஜவுளி பூங்கா இ.குமாரலிங்கபுரத்தில் 1052 ஏக்கர் சிப்காட் நிலத்தில் அமைக்க முடிவானது. இதில் 51 சதவீதம் மத்திய அரசும், 49 சதவீதம் மாநில அரசும் நிதி ஒதுக்குகிறது.

ஒரு துணியின் துவக்கம் முதல் இறுதி வரை என்னென்ன தொழில் செய்யப்படுகின்றனவோ அதற்கான ஆலைகள் அமைக்கப்பட உள்ளன. தையல், டிசைனிங், டை உள்ளிட்ட ஜவுளி தொடர்பான அனைத்து தொழில்களும் இந்த பூங்காவில் இடம்பெற உள்ளன. இதில் பணிபுரியும் ஊழியர்களுக்கான குடியிருப்பு வசதிகளும் செய்யப்பட உள்ளன.

இதுவரை 11 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. தாமிரபரணி குடிநீர் வசதிக்காக தொட்டி அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மத்திய ஜவுளித்துறை பி.எம்.மித்ரா ஜவுளி பூங்கா திட்டத்தை செயல்படுத்த வளர்ச்சிப்பணிகளுக்காக ரூ.1894 கோடி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை சரி செய்ய 15 பொதுவான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், 5 பூங்கா வளாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஏற்படுத்த உள்ளதாகவும், ரூ.10 ஆயிரம் கோடி வரை முதலீடு வரவுள்ளதாகவும்தெரிவித்துள்ளது.

கட்டுமானப் பணிகள் 2026 செப். ல் நிறைவு பெறும். 1 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற வாய்ப்புள்ளது. இந்நிலையில் விரைவில் கார்மென்ட் ஆலைகள், உள்வட்ட ரோடு பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us