மத்திய பாதுகாப்பு படை வீரர் தேர்வு; புதுச்சேரியில் நாளை நடக்கின்றது
மத்திய பாதுகாப்பு படை வீரர் தேர்வு; புதுச்சேரியில் நாளை நடக்கின்றது
UPDATED : ஏப் 12, 2025 12:00 AM
ADDED : ஏப் 12, 2025 11:42 AM
 புதுச்சேரி: 
புதுச்சேரியில் நாளை மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் தேர்வு நடக்கிறது.
நிர்வாக சீர்திருத்த துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் செய்திக்குறிப்பு:
மத்திய பணியாளர் தேர்வாணையம் மத்திய பாதுகாப்பு படை, கடற்படைகளுக்கு தேர்வு நடத்தும் மையாக புதுச்சேரியை தேர்வு செய்துள்ளது. அதன்படி புதுச்சேரியில் நாளை 13ம் தேதி ஒருங்கிணைந்து பாதுகாப்பு படை பிரிவு தேர்வு, லாஸ்பேட்டை வள்ளலார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது.
காலை 9:00 முதல் 11:00 மணி வரையிலும், மதியம் 12:30 மணி முதல் 2:30 மணி வரையிலும், மாலை 4 முதல் 6:30 மணி வரையிலும் என 3 பிரிவாக 112 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேசிய பாதுகாப்பு, கடற்படை பிரிவுக்கான தேர்வு லாஸ்பேட்டை அரசு பெண்கள் பொறியியல் கல்லுாரியில் நடக்கிறது.
இத்தேர்வை 186 பேர் எழுதுகின்றனர். காலை 10 முதல் 12:30 மணி வரையிலும், மதியம் 2 முதல் 4:30 மணி வரையிலும் 2 கட்டமாக தேர்வு நடக்கிறது. ஒட்டுமொத்தமாக 298 பேர் தேர்வு எழுத உள்ளனர். இத்தேர்வுக்கான ஏற்பாடுகளை புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை செய்துள்ளது.
தேர்வர்கள் வசதிக்காக 13ம் தேதி பஸ் நிலையத்திலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. 30 நிமிடம் முன், தேர்வு மையம் வர வேண்டும். மின்னணு தகவல் தொடர்பு சாதனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

