UPDATED : நவ 07, 2024 12:00 AM
ADDED : நவ 07, 2024 04:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொழில்முறையில் கழிவுகளை உகந்தவையாக மாற்றுவது குறித்த சான்றிதழ் படிப்பை சென்னை பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகம் வழங்குகிறது.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் பசுமை திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இப்படிப்பு வழங்கப்படுகிறது.
படிப்பு காலம்:
ஓர் ஆண்டு
தகுதி:
உரிய 4 ஆண்டு இளநிலை பட்டப்படிப்புடன் ஓர் ஆண்டு துறை சார்ந்த அனுபவம் அல்லது உரிய 3 ஆண்டு இளநிலை பட்டப்படிப்புடன் இரண்டு ஆண்டுகள் துறை சார்ந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 3 ஆண்டுகள் அனுபவத்துடன் டிப்ளமா படித்தவர்களும், இணையான தகுதியான பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
நவம்பர் 7
விபரங்களுக்கு:
https://www.unom.ac.in/