UPDATED : ஆக 29, 2024 12:00 AM
ADDED : ஆக 29, 2024 12:11 PM

மத்திய வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரின் டிரேட்' சான்றிதழ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அறிமுகம்:
ஐ.ஐ.எப்.டி., எனும் இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனம் கடந்த 1963ம் ஆண்டு ஒரு தன்னாட்சி அமைப்பாக நிறுவப்பட்டது. இந்தியாவின் வெளி வர்த்தகத் துறைக்கான திறன்களை வளர்க்கும் வகையில் நிறுவப்பட்ட இந்நிறுவனம், சர்வதேச வர்த்தகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்வதோடு பல்வேறு பயிற்சிகளையும் வழங்குகிறது.
கடந்த 2002ம் ஆண்டு நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்தை பெற்றுள்ளது. 'நாக்' எனும் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலால் கிரேடு 'ஏ' நிறுவனமாக அங்கீகரித்துள்ளது.
படிப்பு:
போஸ்ட் கிராஜுவேட் சர்ட்டிபிகேட் இன் மேனேஜ்மெண்ட் - இண்டர்நேஷனல் பிசினஸ் (பி.ஜி.சி.எம்.,- ஐ.பி.,)
கால அளவு: 12 மாதங்கள் வார இறுதிநாட்களில் நேரடி வகுப்புகளாக வழங்கப்படுகின்றன.
படிப்பு:
ஆன்லைன் சர்ட்டிபிகேட் புரொகிராம் ஆன் எக்ஸ்போர்ட் இம்போர்ட் மேனேஜ்மெண்ட்
கால அளவு: 150 மணிநேரங்கள். வார இறுதிநாட்களில் ஆன்லைன் வாயிலாக கற்பிக்கப்படுகின்றன.
கல்வித் தகுதி:
இரு படிப்புகளுக்குமே ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு அடிப்படை கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
https://docs.iift.ac.in/pilotweb/PGCMIB/ மற்றும் https://docs.iift.ac.in/pilotweb/ocpem/ ஆகிய இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். படிப்பிற்கு ஏற்ப விண்ணப்பக் கட்டணம் மற்றும் கல்விக் கட்டணம் மாறுபடுகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஆன்லைன் படிப்பு: ஆகஸ்ட் 31
பி.ஜி.சி.எம்.,- ஐ.பி.,: செப்டம்பர் 5
விபரங்களுக்கு:
www.iift.ac.in