உலக சாதனை சிலம்பம் நிகழ்ச்சி விழுப்புரம் மாணவர்களுக்கு சான்றிதழ்
உலக சாதனை சிலம்பம் நிகழ்ச்சி விழுப்புரம் மாணவர்களுக்கு சான்றிதழ்
UPDATED : ஏப் 11, 2025 12:00 AM
ADDED : ஏப் 11, 2025 08:45 AM
விழுப்புரம்:
உலக சாதனைக்கான சிலம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்ற விழுப்புரம் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.
திருச்சி முதலியார் சரித்திரம் ரயில்வே மைதானத்தில் கடந்த ஜன., 12ம் தேதி சிலம்பம் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 12 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். விவசாயத்தை பாதுகாக்கவும், அயல் ஆக்கிரமிப்பு தாவரங்களை அழித்தல், இயற்கை தாவரங்களை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த நிகழ்ச்சி நடந்தது. இதில், 10 வயது முதல் 35 வரையிலான ஆண்கள், பெண்கள் பங்கேற்றனர்.
வேலுதேவர் அறக்கட்டளை, இந்திய சிலம்பம் சம்மோனியம், தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் இணைந்து நடந்த இந்த நிகழ்ச்சியில், சென்னை ஐகோர்ட் நீதிபதி முரளிசங்கர், இந்திய சிலம்பம் சம்மோனியம் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த டி.என்.ஆர்.எஸ்., அன்பு சிலம்பம் மற்றும் கராத்தே அறக்கட்டளை மாணவர்கள் 100 பேர் கலந்து கொண்டு, இடைவிடாமல் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர்.
இந்த மாணவர்கள் உலக சாதனைக்கான சான்றிதழ் பெற்றனர். இந்த சான்றிதழை மாணவ, மாணவிகளுக்கு விழுப்புரம் மாவட்ட சிலம்பாட்ட கழகம் தலைவர் கந்தன், செயலாளர் அன்பரசி, டி.என்.ஆர்.எஸ்., அன்பு சிலம்பம் மற்றும் கராத்தே அறக்கட்டளை பயிற்சியாளர் அன்பரசி ஆகியோர் பாராட்டி சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினர்.

