தொல்லியல், கல்வெட்டு பயிற்சி மாணவ மாணவியருக்கு சான்றிதழ் வழங்கல்
தொல்லியல், கல்வெட்டு பயிற்சி மாணவ மாணவியருக்கு சான்றிதழ் வழங்கல்
UPDATED : ஜூன் 14, 2026 11:33 AM
ADDED : ஜூன் 14, 2026 11:34 AM
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியகத்தில் தொல்லியல் மற்றும் கல்வெட்டு பயிற்சியில் பங்கேற்ற மாணவ மாணவியருக்கு சான்றிதழ் வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
கடந்த 3ம் தேதி தொடங்கிய இந்த, 10 நாள் பயிற்சியில், அருங்காட்சியகப் பொருட்களைக் கையாளும் முறைகள், தொல்லியல் பொருட்களைப் பராமரிப்பது மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வெட்டுகளைப் படிப்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டன.
இப்பயிற்சியின் நிறைவு விழா நேற்று முன் தினம், காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அருங்காட்சியக காப்பாட்சியர் உமாசங்கர் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற தொல்லியல் அறிஞர் ஜவகர் பாபு, செல்வராசன் ஆகியோர், பயிற்சி பெற்ற செய்யாறு அறிஞர் அண்ணா கலைக் கல்லுாரி மாணவ மாணவியர் 45 பேருக்கு சான்றிதழ்களை வழங்கினர்.
