UPDATED : செப் 07, 2026 10:06 PM
ADDED : செப் 07, 2026 10:06 PM
கோவை:
மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும் 'வளர்ச்சியடைந்த பாரத இளம் தலைவர்கள் கலந்துரையாடல் - 2027' போட்டிகளில்பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும், 'மேரா யுவா பாரத்' அமைப்பு சார்பில் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் பங்கேற்கலாம்.
முதற்கட்டமாக, ஆன்லைன் வினாடி-வினா போட்டி, வரும் 30ம் தேதி வரை mybharat.gov.in இணையதளத்தில் நடக்கிறது. இதைத்தொடர்ந்து கட்டுரை போட்டி, மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடத்தி, திறமையாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கலாசாரம், சமூக பிரச்னைகளுக்கான ஹேக்கத்தான், இளம் தொழில்முனைவோர் சவால், இளைஞர் நாடாளுமன்றம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன.
இதில் தேர்வு செய்யப்படும் சாதனையாளர்கள், 2027 ஜன.10 முதல் 12 வரை டில்லியில் நடக்கும் தேசிய அளவிலான நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுவர்.
அங்கு நாட்டின் முக்கிய தலைவர்களிடம் தங்களது கருத்துகளையும், புதிய யோசனைகளையும் தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படும்.
