sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

சந்திரயான் - 4 திட்டம் நிலவில் தரையிறங்கும் இடம் தேர்வு

/

சந்திரயான் - 4 திட்டம் நிலவில் தரையிறங்கும் இடம் தேர்வு

சந்திரயான் - 4 திட்டம் நிலவில் தரையிறங்கும் இடம் தேர்வு

சந்திரயான் - 4 திட்டம் நிலவில் தரையிறங்கும் இடம் தேர்வு


UPDATED : பிப் 11, 2026 08:06 AM

ADDED : பிப் 11, 2026 08:08 AM

Google News

UPDATED : பிப் 11, 2026 08:06 AM ADDED : பிப் 11, 2026 08:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'சந்திரயான் - 4' திட்டத்துக்கு இன்னும் இரு ஆண்டுகள் உள்ள நிலையில், நிலவின் தென் துருவப் பகுதியில் விண்கலம் தரையிறங்குவதற்கான இடத்தை, 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அடையாளம் கண்டுள்ளது.

'சந்திரயான் - 3' திட்ட வெற்றியைத் தொடர்ந்து, நிலவின் தென் துருவப் பகுதியில் ஆய்வு மேற்கொள்ள, 'இஸ்ரோ' முடிவு செய்துள்ளது. இத்திட்டத்துக்கு, 'சந்திரயான் - 4' என பெயரிடப்பட்டது. ஆனால் இது, 'சந்திரயான் - 3' போலல்லாமல், நிலவின் மண்ணை சேகரித்து மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் திட்டம்.

'சந்திரயான் - 4' திட்டத்தில், உந்துவிசை தொகுதி, தரையிறங்கும் தொகுதி, மேலேறும் தொகுதி, மாற்றும் தொகுதி, மீண்டும் நுழைவு தொகுதி, இது மாதிரிகளுடன் பூமிக்கு திரும்பும் ஆகியவை இடம் பெற உள்ளன. 2028ல், 'சந்திரயான் - 4' திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்துள்ள நிலையில், மத்திய அரசும் இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலையில், 'சந்திரயான் - 4' திட்டத்தில், நிலவின் தென் துருவப் பகுதியில் விண்கலம் தரையிறங்குவதற்கான இடத்தை இஸ்ரோ அடையாளம் கண்டுள்ளது.

நிலவின் தென் துருவத்தில் உள்ள எம்.எம்., எனப்படும், 'மான்ஸ் மவுட்டன்' என்ற பகுதியில் இந்த விண்கலம் தரையிறங்க உள்ளது. இதற்காக நான்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், எம்.எம்., 4 என்ற இடத்தை இஸ்ரோ உறுதி செய்துள்ளது.

தேர்வானது எப்படி?

எம்.எம்., 4 பகுதியில் பள்ளங்கள் மற்றும் பாறைகள் போன்ற தடைகள் மிகக் குறைவாக உள்ளன நிலப்பரப்பின் சராசரி சாய்வு, ஐந்து டிகிரி மட்டுமே. இது விண்கலம் நிலைத்தடுமாறாமல் தரையிறங்க உதவும் உயர் ரக கேமரா மூலம் எடுக்கப்பட்ட படங்களை ஆய்வு செய்ததில் இந்த பகுதி தகுந்த இடமாக தேர்வானது.






      Dinamalar
      Follow us