UPDATED : மே 31, 2025 12:00 AM
ADDED : மே 31, 2025 08:45 AM
சென்னை:
அரசுப்பணி, ஆசிரியர் பணியில் உள்ள திருமணமான இளம்பெணகளின், மகப்பேறு விடுப்பில் மாற்றம் செய்து, அரசாணை வெளியிட்டுஉள்ளது.
அரசுப்பணி மற்றும் ஆசிரியர் பணியில் சேருவோர், முதல் மூன்று ஆண்டுகளில், இரண்டாண்டு பணி நாட்களை கட்டாயம் நிறைவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.
இந்த காலகட்டத்தில், திருமணமான இளம்பெண்கள், ஓராண்டுகால மகப்பேறு எடுக்கும் நிலையில், அடுத்த இரண்டு ஆண்டுகள் விடுப்பு எடுக்காமல் பணிபுரிந்தால்தான், பதவி உயர்வு உள்ளிட்டவற்றிற்கு தகுதியானவராக கருதப்படும் நிலை உள்ளது.
இந்நிலையில், திருமணமான பெண் பணியாளர்கள், முதல் மூன்று ஆண்டுகளுக்குள் எடுக்கும் மகப்பேறு விடுப்பு காலத்தை, அவர்களின் தகுதிகாண பருவத்துக்கு கணக்கில் எடுத்துக் கொள்ள அனுமதித்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சலுகை, கடந்த மாதம் 28ம் தேதி முதல் மகப்பேறு விடுப்பில் உள்ள பணியாளர்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

