UPDATED : ஜூன் 29, 2025 12:00 AM
ADDED : ஜூன் 29, 2025 03:39 PM

சென்னை:
சென்னையில் தினமலர் நடத்தி வழிகாட்டி நிகழ்ச்சியில் கல்வி ஆலோசகர் ரமேஷ் பிரபா கெமிக்கல் இன் ஜினியரிங் துறை குறித்து பேசினார்.
அவர் பேசியதாவது:
இந்த ஆண்டு கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சீட் கிடைக்கும் என்பது உறுதி. கல்லுாரியை தேர்வு செய்வது முக்கியமா? பாடத்தை தேர்வு செய்வது முக்கியமா என்றால், கல்லுாரியை தேர்வு செய்வதே முக்கியம். சிறந்த கல்லுாரியில், நீங்கள் சுமார் என நினைக்கும் பாடத்தை எடுத்து படித்தாலும் வேலை கிடைக்கும். நல்ல கல்லுாரியில் கணினி அறிவியல் கிடைக்கவில்லை என்றால், வேறுபாடத்தை எடுத்து படிக்கலாம். இன்ஜினியரிங் துவங்கிய காலத்தில், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மட்டுமே இருந்தன. அதன்பிறகே, எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் வந்தன. தற்போது கெமிக்கல் இன்ஜினியரிங் பிரபலமாகி வருகிறது.
இன்ஜினியரிங்கில் அரியர்ஸ் இல்லாமல் இருப்பது என்பது சாதனை. முதல் செமஸ்டரில் அரியர் இல்லாமல் கடந்து விட்டால், மற்ற செமஸ்டர்களையும் கடந்து விடலாம். இன்றைய காலக்கட்ட மாணவர்களை கையாள்வது சிரமமாக உள்ளது. வீட்டிலும் அவர்களை மாற்ற முடியவில்லை; கல்லுாரியிலும் மாற்ற முடியவில்லை. இதற்கு, ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குழந்தை, இரண்டு குழந்தை இருப்பதே காரணம்.
அணுகுமுறையை சரிசெய்ய மாணவர்களின் வேண்டியது கட்டாயம். இன்றைய காலக்கட்டத்தில், மாணவர்கள் ஹாஸ்டலில் தங்கி படித்தால்தான், சொந்த காலில் நிற்கும் மனப்பான்மை, உதவி செய்தல் உள்ளிட்ட பண்புகளை கற்றுக்கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.