sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கைவினை பொருட்கள் விற்பனைக்காக ரூ.40 கோடியில் சென்னை அங்காடி

/

கைவினை பொருட்கள் விற்பனைக்காக ரூ.40 கோடியில் சென்னை அங்காடி

கைவினை பொருட்கள் விற்பனைக்காக ரூ.40 கோடியில் சென்னை அங்காடி

கைவினை பொருட்கள் விற்பனைக்காக ரூ.40 கோடியில் சென்னை அங்காடி


UPDATED : ஜூன் 25, 2024 12:00 AM

ADDED : ஜூன் 25, 2024 06:15 AM

Google News

UPDATED : ஜூன் 25, 2024 12:00 AM ADDED : ஜூன் 25, 2024 06:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
சென்னையில் கைவினைப் பொருட்கள் விற்பனையை ஊக்கப்படுத்த, 40 கோடி ரூபாயில், 5 ஏக்கரில், சென்னை அங்காடி அமைக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில், சட்டசபையில் அவர் வெளியிட்ட 46 அறிவிப்புகள்:


*சென்னையில் உள்ள 10 பொது நுாலகங்கள், 20 கோடி ரூபாயில், மின் வழி கற்றல் வசதி கொண்ட மையங்களாக மாற்றப்படும்

*கைவினைப் பொருட்கள் விற்பனையை ஊக்குவிக்க, கைவண்ணம் சதுக்கம் எனப்படும், சென்னை அங்காடி, 40 கோடி ரூபாயில், 5 ஏக்கரில் அமைக்கப்படும்

*மெரினா கலங்கரை விளக்கம் முதல் தீவுத்திடல் வரை, மெரினா பாரம்பரிய வழித்தடம், 10 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும்

*அண்ணா சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலைக்கு, உள்ளூர் பகுதி திட்டம் தயாரிக்கப்படும்

*சென்னைப் பெருநகர பகுதிக்கு வெள்ள கட்டுப்பாடு வரைபடம்; நகர்ப்புற வடிவமைப்பு வழிகாட்டுதல்கள் உருவாக்கப்படும்

*கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம், 10 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும்; 15 கோடி ரூபாயில் மழை நீர் வடிகால் அமைக்கப்படும்; 7 கோடி ரூபாயில், குளிர்சாதன சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும்

*சென்னையில் மூன்று பன்னோக்கு மையங்கள், 30 கோடியில் அமைக்கப்படும். சேத்துப்பட்டு பசுமை பூங்கா, 10 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும்

*10 சுரங்கப்பாதைகள் 8 கோடி ரூபாயிலும்; முக்கிய போக்குவரத்து சிக்னல்கள், சூரிய சக்தியில் இயங்கும் வகையில், 5 கோடி ரூபாயிலும் மேம்படுத்தப்படும்

*திரு.வி.க., நகர் கொன்னுார் நெடுஞ்சாலையில், 10 கோடி ரூபாயில் சமுதாயக்கூடம்; ஆர்.கே.நகர் இளையா தெருவில், 8 கோடி ரூபாயில், நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டுத் திடல் அமைக்கப்படும்

*சென்னை, வில்லிவாக்கம் அகத்தியர் நகரில் அமைந்துள்ள, சிறுவர் விளையாட்டுத் திடல், 3 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும். பெரம்பூர் சென்ட்ரல் அவின்யூ சாலையில், 8 கோடி ரூபாயில் சமுதாயக்கூடம் அமைக்கப்படும்

*கொண்டித்தோப்பு வால்டாக்ஸ் சாலையில், 20 கோடி ரூபாயில் சமுதாயக்கூடம் மற்றும் விளையாட்டுத்திடல்; சேத்துப்பட்டு அப்பாசாமி தெருவில், 2 கோடி ரூபாயில் கால்பந்து மைதானம்; ராயபுரம் மூலகொத்தளத்தில், 10 கோடி ரூபாயில் ஒருங்கிணைந்த விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும்

*சேப்பாக்கத்தில் 10 கோடி ரூபாயில் ரத்த சுத்திகரிப்பு மையம்; மயிலாப்பூர் லஸ் நிழற்சாலையில், 3 கோடி ரூபாயில் பண்பாட்டு அரங்கம் அமைக்கப்படும்

*சைதாப்பேட்டை அம்மா பூங்கா 2.50 கோடி ரூபாயிலும்; தி.நகர் பஸ் நிலையம், 10 கோடி ரூபாயிலும் மேம்படுத்தப்படும்

*கே.கே.நகரில் உள்ள சாலை சந்திப்பு மற்றும் சிவன் பூங்கா, 3 கோடி ரூபாயிலும்; அய்யப்பன்தாங்கல், திருவான்மியூர் பஸ் நிலையம், தலா 10 கோடி ரூபாயிலும் மேம்படுத்தப்படும்

*நெமிலிச்சேரியில் அமைந்துள்ள புத்தேரி ஏரி, 5 கோடி ரூபாயிலும்; தாம்பரத்தில் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பூங்கா, நல்ல தண்ணீர் குளம், 5 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும்

*அம்பத்துார் பானு நகரில், 6 கோடி ரூபாயில் நவீன வசதிகளுடன் கூடிய, விளையாட்டு மைதானம் அமைக்கப்படும்

*ஆவடி, பாடியநல்லுார், தங்கசாலை வள்ளலார் நகர் பஸ் நிலையம், தலா 10 கோடி ரூபாயிலும்; போரூர் ஏரி, பெருங்குடி ஏரி தலா 10 கோடி ரூபாயிலும் மேம்படுத்தப்படும்.

இவ்வாறு சேகர்பாபு அறிவித்தார்.






      Dinamalar
      Follow us