சென்னையின் முதல் முழுமையான கேம்பிரிட்ஜ் உறைவிடப் பள்ளி
சென்னையின் முதல் முழுமையான கேம்பிரிட்ஜ் உறைவிடப் பள்ளி
UPDATED : டிச 11, 2025 07:07 AM
ADDED : டிச 11, 2025 07:07 AM
சென்னை:
சென்னையின் முதல் முழுமையான கேம்பிரிட்ஜ் (ஐஜிஎஸ்இ) உறைவிடப் பள்ளியாக 'சேஜ்ஹில் கிரியேட்டிவ் பாத்வே' தொடங்கப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.
நீலகேசவ் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் டிரஸ்ட் மூலம் நிறுவப்பட்ட இந்த பள்ளி, மாணவர்களின் கற்றல் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் பாதுகாப்பு, இடவசதி மற்றும் திட்டமிட்ட கல்வி கட்டமைப்புகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. கேம்பிரிட்ஜ் ஐஜிஎஸ்இ கல்வி முறையை 'இன்டர்நேஷனல் கிரியேட்டிவ் பாத்வே' திட்டத்துடன் ஒருங்கிணைத்து, கருத்துத் தெளிவு, தகவல் தொடர்பு திறன் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் கல்வி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி தொடக்கம் குறித்து இயக்குனர் சந்தீப் வாசு கூறுகையில், நவீன கால குழந்தைகளின் தேவைகளையும் பெற்றோரின் எதிர்பார்ப்புகளையும் கருத்தில் கொண்டு இந்த உறைவிடப் பள்ளி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சென்னையின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள விசாலமான வளாகத்தில், உறைவிட விடுதிகள், நவீன வகுப்பறைகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் திறந்த வெளி அமைவிடங்கள் உள்ளதாகவும், குடும்பங்களுடன் தொடர்ச்சியான தொடர்பை உறுதி செய்யும் ஈடுபாட்டு கல்வி மாதிரி பின்பற்றப்படுவதாகவும் கூறினார். வரும் கல்வியாண்டில் பள்ளி செயல்பாட்டை தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

