UPDATED : அக் 22, 2026 05:29 PM
ADDED : அக் 22, 2026 05:30 PM
அ நிறம் | அளவு
சிதம்பரம்:
சிதம்பரம் குருஞான சம்பந்தம் மெட்ரிக் பள்ளி சார்பில், குறுவட்ட அளவிலான செஸ் மற்றும் கேரம் போட்டி நடந்தது.
பள்ளி வளாகத்தில் நடந்த போட்டியில் சிதம்பரம் வட்டார அளவிலான 30 பள்ளிகளை சேர்ந்த 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான 450க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
