UPDATED : ஆக 19, 2026 05:54 PM
ADDED : ஆக 19, 2026 05:58 PM
அ நிறம் | அளவு
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில், மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிகள் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று நடைபெற்றது.
போட்டிகளை காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நளினி தொடங்கி வைத்தார். இதில் 60 மாணவர்கள், 60 மாணவியர் என மொத்தம் 120 பேர் பங்கேற்றனர்.
வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவ - மாணவியர் அடுத்தகட்டமாக மாநில அளவிலான சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவர் எனத் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக, மாவட்ட கல்வி அலுவலர்கள் கோமதி, எழில், காந்திராஜன் மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துவேல் ஆகியோர் பங்கேற்றனர்.
