செய்யூர் அரசு கல்லுாரியில் சேர ஆன்லைன் விண்ணப்பம் வழங்கல்
செய்யூர் அரசு கல்லுாரியில் சேர ஆன்லைன் விண்ணப்பம் வழங்கல்
UPDATED : மே 12, 2026 06:20 PM
ADDED : மே 12, 2026 06:21 PM
செய்யூர்:
செய்யூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 2026 - 27ம் கல்வி ஆண்டிற்கான மாணவ மாணவியர் சேர்க்கைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
செய்யூரில் கடந்த கல்வி ஆண்டில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டது.
ஆங்கில வழி கற்றலில் 3, தமிழ் வழி கற்றலில் 2 என மொத்தம் 5 பாடப் பிரிவுகளின் கீழ் 270 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தற்போது பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 2026 - 27ம் கல்வி ஆண்டிற்கான, மாணவ மாணவியர் சேர்க்கைக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
இது குறித்து கல்லுாரி முதல்வர் மாதவன் கூறியதாவது:
செய்யூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 2026 - 27ம் கல்வி ஆண்டிற்கான, மாணவ மாணவியர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
கடந்த 7ம் தேதி தொடங்கப்பட்டு, 29ம் தேதி வரை பதிவு செய்யப்பட உள்ளன.
விருப்பம் உள்ள மாணவ மாணவியர் www.tngasa.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் சந்தேகங்களுக்கு தீர்வு காண 9952900650 அல்லது 99942 00848 ஆகிய மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்
இவ்வாறு அவர் கூறினார்.
