சிதம்பரம் ஆறுமுக நாவலர் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
சிதம்பரம் ஆறுமுக நாவலர் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
UPDATED : ஏப் 28, 2026 04:27 PM
ADDED : ஏப் 28, 2026 04:29 PM
சிதம்பரம்:
சிதம்பரம் ஆறுமுக நாவலர் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பின்பு நடத்திய சந்திப்பு நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சிதம்பரம் மேல வீதியில் உள்ள தவத்திரு ஆறுமுக நாவலர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த, 1976ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. பள்ளி செயலாளர் அருள்மொழிச்செல்வன் தலைமை தாங்கினார்.
முன்னாள் மாணவர்கள் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் சீனி மோகன் முன்னிலை வகித்தார். சிவக்குமார் வரவேற்றார். நாட்டியாஞ்சலி அறக்கட்டளை தலைவர் சம்மந்தம், மா.கம்யூ., மூத்த நிர்வாகி மூசா, வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், காந்திமன்ற தலைவர் ஞானம், முன்னாள் மாணவர்கள் செந்தமிழ்ச்செல்வன், ராமநாதன், தலைமை ஆசிரியர் ராம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தி பேசினர்.
இந்த நிகழ்ச்சியில், 50 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள், தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்று பள்ளி கால நினைவுகளையும், தற்போதைய நிலை குறித்து பகிர்ந்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
முன்னாள் மாணவர்கள் சார்பில், பள்ளியில் அமைக்கப்பட்ட அறிவியல் ஆய்வகம் திறக்கப்பட்டது. மாணவர்கள் பயன்பாட்டிற்கு புதிய கம்யூட்டர்கள் வழங்கப்பட்டது. மாணவியர்களுக்கான கழிப்பறை கட்டுமான பணி துவங்கியது.
முன்னாள் மாணவர்கள் சிற்றம்பலம், கிருஷ்ணன், சீனிவாசன், ராஜாராம் ஒருங்கிணைத்தனர். தமிழாசிரியர் செல்வம் தொகுத்து வழங்கினார். கவுரி ராமநாதன் நன்றி கூறினார்.
