தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிதம்பரம் பாலிடெக்னிக் கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

சிதம்பரம் பாலிடெக்னிக் கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

சிதம்பரம் பாலிடெக்னிக் கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி


UPDATED : ஆக 03, 2026 02:51 PM

ADDED : ஆக 03, 2026 02:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 03, 2026 02:51 PM ADDED : ஆக 03, 2026 02:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம்:
சிதம்பரம் முத்தையா பாலிடெக்னிக் கல்லுாரியில், 40 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற, முன்னாள் மாணவர்கள் சந்தித்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

சிதம்பரம் முத்தையா பாலிடெக்னிக் கல்லுாரியில், 'சுவடுகளை தேடி' என்ற தலைப்பில், 40 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்வில், பலர் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்று மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் அருமைநாயகம் தலைமை தாங்கினார். ராஜேஸ்வரி வரவேற்றார். பேராசிரியர்கள் ராஜன், பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் ஜெயப்பிரியா குழும தலைவர் ஜெய்சங்கர், ரமேஷ்குமார், யாசின், மதன்ராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றி இக்கல்வியாண்டில் பயிலும் மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர்.

அருள்பிரகாசம், பாலசுப்ரமணியன், சரவணன், கமலக்கண்ணன், வாழ்த்துரை வழங்கினர். சிவானந்த விஜயலட்சுமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கமலக்கண்ணன் நன்றி கூறினார். முன்னாள் மாணவர்கள் சார்பில், கல்லுாரியில் குடிநீர் வசதிக்கு டேங்க் அமைக்க ரூ.7 லட்சம் நிதி வழங்கப்பட்டது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us