sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தொங்கும் தொட்டிலில் அமர்ந்து பாடம் படிக்கும் சிறார்கள்

/

தொங்கும் தொட்டிலில் அமர்ந்து பாடம் படிக்கும் சிறார்கள்

தொங்கும் தொட்டிலில் அமர்ந்து பாடம் படிக்கும் சிறார்கள்

தொங்கும் தொட்டிலில் அமர்ந்து பாடம் படிக்கும் சிறார்கள்


UPDATED : அக் 15, 2025 06:11 PM

ADDED : அக் 15, 2025 06:12 PM

Google News

UPDATED : அக் 15, 2025 06:11 PM ADDED : அக் 15, 2025 06:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடகு:
கர்நாடகாவில் அரசு பள்ளிகளின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் குறைகின்றன. அரசு பள்ளிகள் பல சவால்கள், பிரச்னைகளுடன் செயல்படுகின்றன. அடிப்படை வசதிகள் பற்றாக்குறை, ஆசிரியர்கள் இல்லாதது, மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தது உள்ளிட்ட பல காரணங்களால் அரசு பள்ளிகள் மூடப்படுகின்றன.

இத்தகைய சூழ்நிலையிலும் ஒரு அரசு பள்ளி, மாணவர்களை தன் வசம் கவர்ந்திழுக்கிறது. இதில் பிள்ளைகளை சேர்க்க, பெற்றோர் போட்டி போடுகின்றனர். இந்த அதிசய பள்ளி குடகில் உள்ளது.

சளைத்தது இல்லை குடகு மாவட்டம், சோம்வார்பேட் தாலுகாவின் முள்ளூர் கிராமத்தில் அரசு தொடக்க பள்ளி உள்ளது. இது அரசு பள்ளி என்றால், நம்புவது கஷ்டம். தனியார் பள்ளிகளுக்கு எந்த வகையிலும் சளைத்தது இல்லை; இங்கு மாணவர்களை மகிழ்விக்க, பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பள்ளி தலைமை ஆசிரியர் சதீஷ், தன் சொந்த செலவில் பல வசதிகளை செய்துள்ளார். 70,000 ரூபாய் செலவில் 20 அடி உயரம், பத்து அடி அகலத்தில் தொங்கும் தொட்டில் அமைத்துள்ளார். இதில் ஒரே நேரத்தில் 30 மாணவர்கள் அமரலாம். பள்ளி சிறார்கள் மிகவும் குஷியுடன் தொட்டிலில் அமர்ந்து பாடம் கேட்கின்றனர்.

அதே போன்று 20 அடி நீளம், மூன்று அடி அகலம், ஆறு அடி உயரமான செயற்கை குகை அமைத்துள்ளார். குகைக்குள் வவ்வால்கள், சிலந்தி வலை, எலும்புக்கூடு உட்பட விலங்குகள் பறவைகளின் மாதிரிகள் வைக்கப்பட்டுள்ளன. குகைக்குள்ளே செல்லும்போது, ஆச்சரியமான சத்தங் கள் கேட்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இயற்கையின் மடி பள்ளி வளாகத்தில் நுழைந்தவுடன், குகை காணப்படுகிறது. இதற்குள் நுழைந்து சென்றால், உள்ளே சிறார்களை கவரும் விலங்குகளின் மாதிரிகள் தென்படும். குகை முடிவில் படிகள் தென்படும்.

இதில் ஏறி சென்றால் மரத்தின் மீதுள்ள தொங்கு தொட்டிலை அடையலாம். இயற்கையின் மடியில் தங்களுக்கு பிடித்தமான சூழ்நிலையில், சிறார்கள் பாடம் கேட்கின்றனர்.

அது மட்டுமன்றி, பள்ளியில் ஜிப் லைன், ரோப் வாக், நீச்சல் குளம், மிருகக்காட்சி சாலை உள்ளது. இந்த சிறு பள்ளியில் அதிநவீன தொழில் நுட்பம் செயல்படுகிறது. ஸ்மார்ட் வகுப்பு, நுாலகம், ஆய்வகம் என, அனைத்து வசதிகளும் உள்ளன. பள்ளி இந்த அளவுக்கு மேம்பட, தலைமை ஆசிரியர் சதீஷ் காரணம்.

அவர் கூறியதாவது:


சிறார்களுக்கு கல்வியில் ஆர்வத்தை ஏற்படுத்தவும், உற்சாகமாக பாடம் கேட்க வேண்டும் என்ற காரணத்தால், பல நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். சிறார்களுக்கு சாகச மனப்பான்மையை ஏற்படுத்தும் நோக்கில் குகை, புங்கை மரத்தின் மீது தொங்கு தொட்டில் அமைத்துள்ளோம்.

இப்போது மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வருகின்றனர். தற்போது மாணவர் சேர்க்கையும் அதிகரித்துள்ளது. பள்ளியில் மேலும் பல மாற்றங்களை கொண்டு வருவோம். எங்களின் முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us