UPDATED : ஜூன் 12, 2024 12:00 AM
ADDED : ஜூன் 12, 2024 07:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் :
திண்டுக்கல் இலக்கிய களம் சார்பில் சிறார் நுாலக விழா நடந்தது. இலக்கிய கள மனோகரன் தலைமை வகித்தார்.
துணைத் தலைவர் சரவணன் ஆசிரியர் அருள்தாஸ் வரவேற்றனர். ஓய்வு துணை கலெக்டர் செல்வராஜ் ,இலக்கியக் கள நிர்வாகி சிவபாலன் , அறிவியல் இயக்க செயலர் ராசு, ரோட்டரி குயின் சிட்டி தலைவர் கவிதா, செயலர் பார்கவி, முன்னாள் தலைவர் அனுராஜன் பேசினர். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி நூல்களை தன்னார்வலர்களுக்கு வழங்கினார். இலக்கிய கள இணைச் செயலர் வளர்மதி, நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், ராமநிதி, ஜெயராமன் கலந்து கொண்டனர். திண்டுக்கல் சுற்றிய வட்டாரங்களில் முதல் கட்டமாக 75 மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இல்லம் தேடிக் கல்வியின் மாவட்ட பொறுப்பாசிரியர் குரு பிரசாத் நன்றி கூறினார்.