தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தி யுனிக் அகாடமி பள்ளியில் குழந்தைகள் தின விழா

தி யுனிக் அகாடமி பள்ளியில் குழந்தைகள் தின விழா

தி யுனிக் அகாடமி பள்ளியில் குழந்தைகள் தின விழா


UPDATED : நவ 17, 2026 05:49 PM

ADDED : நவ 17, 2026 05:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2026 05:49 PM ADDED : நவ 17, 2026 05:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருந்துறை:
பெருந்துறையை அடுத்த ஈங்கூர் தி யுனிக் அகாடமி பள்ளியில், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பனோரமா வார விழா கொண்டாடப்பட்டது. விழா நடுவராக ஜெப்ரி ஜொநதன், சிறப்பு விருந்தினராக வித்யா தேவி ஜெயபிரகாஷ் பங்கேற்றனர்.

முதல் நாளில் மேடை மற்றும் மேடைக்கு வெளியே நடைபெறும் பல்வேறு சுவாரஸ்யமான போட்டிகள் நடந்தன. இதில் பல்வேறு பிரிவுகளில் மாணவ, மாணவியர் திறன்களை வெளிப்படுத்தினர். இரண்டாம் நாள் இலக்கியம், கலை மற்றும் படைப்பாற்றல் சார்ந்த போட்டிகளுடன் தொடர்ந்தது.

விழா இறுதி நாளில் அறிவாற்றலை துாண்டும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. நடுவர் மற்றும் சிறப்பு விருந்தினர், பள்ளி தலைவர் இளங்கோ ராமசாமி, முதல்வர் உமையவள்ளி இளங்கோ மற்றும் நிர்வாக இயக்குனர் அஸ்வின் இளங்கோ ஆகியோர், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us