sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ராம்நகர் சபர்பன் பள்ளியில் குழந்தைகள் இலக்கிய விழா

/

ராம்நகர் சபர்பன் பள்ளியில் குழந்தைகள் இலக்கிய விழா

ராம்நகர் சபர்பன் பள்ளியில் குழந்தைகள் இலக்கிய விழா

ராம்நகர் சபர்பன் பள்ளியில் குழந்தைகள் இலக்கிய விழா


UPDATED : ஜூலை 12, 2024 12:00 AM

ADDED : ஜூலை 12, 2024 09:17 AM

Google News

UPDATED : ஜூலை 12, 2024 12:00 AM ADDED : ஜூலை 12, 2024 09:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை :
கோவை புக்கலாட்டா எனும் குழந்தைகளுக்கான இலக்கிய விழா, ராம்நகரில் உள்ள சபர்பன் மேல்நிலைப் பள்ளியில், நாளை மறுநாள் நடக்கிறது.

இவ்விழாவை, ரோட்டரி கோயமுத்தூர் சென்ட்ரல், சபர்பன் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெங்களூருவை சேர்ந்த அட்டா கலாட்டா புத்தக நிலையம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.

வளரும் இளம் குழந்தைகளிடையே, புத்தகம் வாசிக்கும் ஆர்வத்தை துாண்டி, அவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதே, இந்த விழாவின் நோக்கமாகும்.

ராம்நகர் சபர்பன் சொசைட்டியின் உப தலைவர் ரமணி சங்கர் கூறுகையில், ''நாள் முழுவதும் நடைபெறவுள்ள இந்த விழாவில், குழந்தைகளுக்கான இலக்கியம் படைக்கும் பல பிரபல ஆசிரியர்களுடன் சந்திப்பு, கதை சொல்லுதல், கருத்தரங்கங்கள், ஓவியப்பயிற்சி மற்றும் ஸ்பெல்லிங் பீ, வினாடி வினா, பேச்சு போட்டி, பேன்சி டிரஸ் மற்றும் கவிதை எழுதுதல் போன்ற பல்வேறு போட்டிகள் நடக்கவுள்ளன,'' என்றார்.

இலக்கிய விழா காலை, 10:00 முதல் மாலை 4:00 மணி வரை நடைபெறுகிறது. அனுமதி இலவசம். மேலும் விவரங்களுக்கு, 98944 93369, 99457 99224 ஆகிய, எண்களில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us