UPDATED : டிச 13, 2024 12:00 AM
ADDED : டிச 13, 2024 10:35 AM

புதுச்சேரி :
காலாப்பட்டு எம்.ஓ.எச். பாரூக் மரைக்காயர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சமுதாய நலப்பணித் திட்டம், சிறுவர் இலக்கிய இயக்கம் சார்பில் சிறுவர் இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி துணை முதல்வர் பிரேம்குமார் ஜூலியன் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் சுவாமிராஜ் தர்மக்கண் முன்னிலை வகித்தார். ஆசிரியர் மணிகண்டன் வரவேற்றார்.
இயக்க நிறுவனர் பாரதிவாணர் சிவா நோக்க உரையாற்றினார். ராஜேஸ்வரி சிவா நெறியாள்கை செய்தார். இதில், 6, 7 ம் வகுப்பு பயிலும் 78 மாணவிகள் பங்கேற்று, தங்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். பங்கேற்ற மாணவிகளுக்கு நுால் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மொபைல் போனின் விபரீதங்களை வெளிப்படுத்தும் விழிப்புணர்வு நாடகமாக நடித்துக் காண்பித்த மாணவிகளுக்கு குழந்தைக்கவிஞர் வள்ளியப்பா நினைவு சுழற்கேடயம் வழங்கப்பட்டது. சமுதாய நலப்பணித் திட்ட அலுவலர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.