தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சுவஸ்திக் பள்ளியில் குழந்தைகள் தின விழா

சுவஸ்திக் பள்ளியில் குழந்தைகள் தின விழா

சுவஸ்திக் பள்ளியில் குழந்தைகள் தின விழா


UPDATED : நவ 16, 2026 03:33 PM

ADDED : நவ 16, 2026 03:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 03:33 PM ADDED : நவ 16, 2026 03:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே, நெகமம் சின்னேரிபாளையம் சுவஸ்திக் மெட்ரிக்குலேஷன் பள்ளியில், குழந்தைகள் தினத்தையொட்டி 'சுவஸ்திகா - 2026' எனும் கலை இலக்கிய திருவிழா நடந்தது. பள்ளியின் தாளாளர் தீபாகாந்தி தலைமை வகித்தார். துணை முதல்வர் மோகன்ராஜ் வரவேற்றார்.

விளையாட்டு, ஓவியம், பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசுகளை, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்று வழங்கினர். கடந்தாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

அதன்பின், மாணவர்களின் நாடகம், சிலம்பம், நடனம், யோகா உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி ஆசிரியர் சுபா, நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us