UPDATED : ஏப் 15, 2024 12:00 AM
ADDED : ஏப் 15, 2024 05:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:
மதுரையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி ஏப்.,23ம் தேதி அதிகாலையில் நடக்க இருக்கிறது.
இதனையடுத்து மதுரை மாவட்டம் முழுவதும் ஏப்.,23ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக மே 11ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக ஈடுசெய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தஞ்சை பெரிய கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஏப்.,20ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.