தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/'மனதுக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுத்து சாதிக்கணும்'

'மனதுக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுத்து சாதிக்கணும்'

'மனதுக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுத்து சாதிக்கணும்'


UPDATED : அக் 13, 2026 06:46 PM

ADDED : அக் 13, 2026 06:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 06:46 PM ADDED : அக் 13, 2026 06:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
பி.கே.தாஸ் நிகர்நிலை பல்கலை தொழில்நுட்ப பள்ளி, நேரு இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் விமானவியல் பொறியியல் துறை, இந்திய விமானவியல் சங்கம் சென்னை கிளை சார்பில், ஏ.இ.எஸ்.ஐ., வாய்ப்புகளின் இறக்கைகள் 2026 தொழில்நுட்ப அறிவும் தொழில்முறை பாதைகளும்' என்ற தலைப்பில், மாநாடு நடந்தது.

'இஸ்ரோ' முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் பேசுகையில், ''சமூக அழுத்தங்களுக்கு அடிபணியாமல், மனதுக்கு பிடித்த துறையைத் தேர்ந்தெடுத்து இலக்கை நோக்கி விடாமுயற்சியுடன் பயணிக்க வேண்டும்,'' என்றார்.

இந்திய விண்வெளித் துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

பல்கலை இணை வேந்தர் கிருஷ்ணகுமார், துணைவேந்தர் நாகராஜா ஆகியோர் விருதை வழங்கினர். எல் அண்டு டி நிறுவனத்தின், இணை பொது மேலாளர் கிஷோரா ஷெட்டி, இந்திய விமானவியல் சங்க சென்னை கிளை துணைத் தலைவர் பிரேம்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us