UPDATED : டிச 05, 2024 12:00 AM
ADDED : டிச 05, 2024 10:09 AM
மதுரை :
மதுரை கே.புதுார் எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையத்தில் டிச. 7, 8ல் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் கட்டண பயிற்சி அளிக்கப்படுகிறது.
காலை 10:00 முதல் மதியம் 3:00 மணி வரை நடக்கும் பயிற்சியில் ஸ்பான்ஞ் கேக், முட்டை இல்லா கேக், ரவா கேக், ரிச் ப்ளம் கேக், சாக்லேட் கேக் வகைகள், எளிய முறையில் ஐஸிங் செய்தல் கற்றுத்தரப்படும்.
டிச. 14, 15ல் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பயிற்சி அளிக்கப்படும்.
எந்தெந்த பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம், வெளிநாட்டு வாடிக்கையாளர்களை எப்படி தெரிந்து கொள்வது, பாதுகாப்பு வழிமுறை, இன்சூரன்ஸ், கப்பலில் அனுப்புவதற்கான வழிமுறை, விலை நிர்ணயம் பற்றி கற்பிக்கப்படும்.
மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். வங்கி கடனுதவி பெற வழிகாட்டப்படும். அலைபேசி: 86956 46417.