sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

சிப்பெட் 2025-26 கல்வியாண்டுக்கான சேர்க்கை அறிவிப்பு

/

சிப்பெட் 2025-26 கல்வியாண்டுக்கான சேர்க்கை அறிவிப்பு

சிப்பெட் 2025-26 கல்வியாண்டுக்கான சேர்க்கை அறிவிப்பு

சிப்பெட் 2025-26 கல்வியாண்டுக்கான சேர்க்கை அறிவிப்பு


UPDATED : மே 29, 2025 12:00 AM

ADDED : மே 29, 2025 11:03 AM

Google News

UPDATED : மே 29, 2025 12:00 AM ADDED : மே 29, 2025 11:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
மத்திய பெட்ரோகெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் ( சிப்பெட்) 2025-26ம் கல்வியாண்டுக்கான பட்டய மற்றும் முதுநிலை பட்டயப் படிப்புகளுக்கான சேர்க்கையை அறிவித்துள்ளது.

பிளாஸ்டிக் மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைகளில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வரும் சிப்பெட், தொழில்நுட்பக் கல்வி, திறன் மேம்பாடு, தொழில்துறையுடன் இணைந்த பாடத்திட்டங்கள் ஆகியவற்றின் மூலமாக சிறந்த நிபுணர்களை உருவாக்கி வருகிறது.

இந்த ஆண்டிற்கான சேர்க்கை அறிவிப்பில் பின்வரும் தொழில்நுட்பக் களங்களில் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன:


முதுநிலை பட்டயம் - பிளாஸ்டிக் செயல்முறை மற்றும் சோதனை

பட்டயப் படிப்புக்கு பிந்தைய - பிளாஸ்டிக் அச்சு வடிவமைப்பு மற்றும் சிஏடி/சிஏஎம்

பட்டயம் - பிளாஸ்டிக் அச்சு தொழில்நுட்பம்

பட்டயம் - பிளாஸ்டிக் தொழில்நுட்பம்

இந்த படிப்புகள் நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள சிப்பெட் மையங்களில் கற்பிக்கப்படுகின்றன. இதில் சென்னை, மதுரை, ஹைதராபாத், புவனேஷ்வர், ஜெய்ப்பூர், ராஞ்சி, விஜயவாடா, லக்னோ உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மையங்கள் அடங்கும்.

முக்கிய தேதிகள்:


ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடக்கம்: பிப்ரவரி 7, 2025

விண்ணப்பிக்க இறுதி தேதி: ஜூன் 1, 2025

சேர்க்கை தேர்வு நாள் (சிஏடி தேர்வு): ஜூன் 8, 2025

தேர்வு முடிவுகள் வெளியீடு: ஜூன் 13, 2025

வகுப்புகள் தொடக்கம்: ஆகஸ்ட் முதல் வாரம், 2025

இந்த படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.cipet.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.






      Dinamalar
      Follow us