sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சி.ஐ.எஸ்.சி.இ., தேர்வு முடிவுகள்

சி.ஐ.எஸ்.சி.இ., தேர்வு முடிவுகள்

சி.ஐ.எஸ்.சி.இ., தேர்வு முடிவுகள்


UPDATED : மே 03, 2025 12:00 AM

ADDED : மே 03, 2025 03:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 03, 2025 12:00 AM ADDED : மே 03, 2025 03:45 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வு கவுன்சில் நடத்திய 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின.

சி.ஐ.எஸ்.சி.இ., எனப்படும் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் நடத்திய 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி மற்றும் மார்ச்சில் நடந்தன. 20 இந்திய மொழிகள், 14 அன்னிய மொழிகள் உட்பட மொத்தம், 67 பாடங்களில் 10ம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்பட்டன.

இதேபோல் பிளஸ் 2 வகுப்புக்கு, 12 இந்திய மொழிகள் உட்பட 47 பாடங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த இரு வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. இதில், 10ம் வகுப்பில் 99.37 சதவீத மாணவியர் வெற்றி பெற்றதாகவும், மாணவர்கள் சற்று குறைந்து 98.84 சதவீதம் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதேபோல், பிளஸ் 2 தேர்விலும் மாணவியரே சிறப்பிடம் பெற்றுள்ளனர். அவர்கள் 99.45 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் சற்று குறைந்து 98.64 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

இந்த தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவதற்கான இம்ப்ரூவ்மென்ட் தேர்வு ஜூலையில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us