சிவில் சர்வீஸ் தேர்வு முடிவு வெளியீடு: முதல் 3 இடங்களில் ஆண்கள்
சிவில் சர்வீஸ் தேர்வு முடிவு வெளியீடு: முதல் 3 இடங்களில் ஆண்கள்
UPDATED : ஏப் 16, 2024 12:00 AM
ADDED : ஏப் 16, 2024 05:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:
மத்திய அரசின் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் முதல் 3 இடங்களை ஆண்கள் பிடித்து உள்ளனர்.
இன்று( ஏப்.,16) வெளியான தேர்வு முடிவுகளில், ஆதித்யா ஸ்ரீவஸ்தவா என்ற மாணவர் முதல் இடத்தை பிடித்துள்ளார். அனிமேஷ் பிரதான் 2வது இடத்தையும், தோனாரு அனன்யா ரெட்டி 3வது இடத்தை பிடித்துள்ளார். முதல் 5 இடங்களில் 3 இடங்களை ஆண்களும், 2 இடங்களை பெண்களும் பிடித்துள்ளனர்.
மொத்தம் 1016 பேர் வெற்றி பெற்ற நிலையில், 664 பேர் ஆண்கள், 353 பேர் பெண்கள். இவர்களை பல்வேறு துறைகளில் பணியில் அமர்த்த யுபிஎஸ்சி பரிந்துரை செய்துள்ளது.