UPDATED : மே 17, 2024 12:00 AM
ADDED : மே 17, 2024 08:58 AM
பிளஸ் 1 தேர்வில், மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. தினமும் ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தை, தினமும் படித்து விடுவேன். பிளஸ் 2 பொது தேர்விலும் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவேன். ஐ.ஐ.டி.,யில் இஞ்சினியரிங் படிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் படித்து வருகிறேன் என்றார் எஸ்.பிவின்குமார், அரசு மாதிரி உண்டு உறைவிடப்பள்ளி, சட்டமங்கலம்.
இரண்டாமிடம் பெற்றவர் பேட்டி
திருக்கழுக்குன்றம், மங்கலத்தில் வசிக்கிறேன். தந்தை சிவக்குமார், கல்பாக்கம் ஒப்பந்த நிறுவன மேற்பார்வை ஊழியராக பணிபுரிகிறார். பிளஸ் 1ல், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பாடப்பிரிவில் படிக்கிறேன். பள்ளியில் முதலிடமும், மாவட்டத்தில் இரண்டாம் இடமும் பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. பிளஸ் 2விற்கு பின், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படிக்க விருப்பம் என்றார் எஸ்.கோபிகா, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருக்கழுக்குன்றம்.