மார்ச் 3ல் துவங்குகிறது பிளஸ் 2 பொதுத் தேர்வு; அட்டவணை வெளியிட்டார் அமைச்சர் ராஜ்மோகன்
மார்ச் 3ல் துவங்குகிறது பிளஸ் 2 பொதுத் தேர்வு; அட்டவணை வெளியிட்டார் அமைச்சர் ராஜ்மோகன்
UPDATED : அக் 14, 2026 04:40 PM
ADDED : அக் 14, 2026 04:43 PM

சென்னை:
அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.
அப்போது, அவர் கூறியதாவது:
பிளஸ் 2க்கு செய்முறைத் தேர்வு பிப்., 8ம் தேதி துவங்கி பிப்., 18 வரை நடக்கும். எழுத்துத் தேர்வு மார்ச் 3ம் தேதி முதல் ஏப்., 1ம் தேதி வரை நடக்கிறது. 10ம் வகுப்பு செய்முறை பிப்., 19ம் தேதி முதல் பிப்., 26 வரை நடக்கிறது. தமிழ், ஆங்கிலம் போன்ற பாடங்களுக்கான தேர்வு மார்ச் 17ம் தேதி முதல் ஏப்., 12ம் தேதி வரை நடக்கும். தேர்வு முடிவுகள் உத்தேசமாக மே 7ம் தேதி பிளஸ் 2க்கும், 20ம் தேதி 10ம் வகுப்பிற்கும் வெளியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
10ம் வகுப்பு தேர்வு அட்டவணை
தமிழ் - மார்ச் 17, 2027.
ஆங்கிலம் - மார்ச் 25, 2027.
கணிதம் - மார்ச் 31, 2027.
அறிவியில் - ஏப்., 05, 2027.
சமூக அறிவியல் - ஏப்., 09, 2027.
தேர்வு முடிவுகள்
- மே 20, 2027
2027 பிளஸ் 2 தேர்வு அட்டவணை
மார்ச் 3 - தமிழ் மற்றும் இதர மொழிப்பாடம்
மார்ச் 8 - ஆங்கிலம்
மார்ச் 12 - வேதியியல், அக்கவுண்டன்சி, புவியியல்
மார்ச் 15 - கம்யூனிகேட்டிங் ஆங்கிலம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, புள்ளியியல்
மார்ச் 19 - உயிரியல், தாவரவியல், வரலாறு
மார்ச் 23 - இயற்பியல், பொருளாதாரம்
மார்ச் 29 - கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோ பயாலாஜி
தேர்வு முடிவுகள்
- மே 07, 2027
