UPDATED : ஜூன் 12, 2024 12:00 AM
ADDED : ஜூன் 12, 2024 07:44 AM
மதுரை:
டிரைவிங் லைசென்ஸ் விண்ணப்பிப்பவர்களுக்கான மருத்துவ சான்றிதழை சாரதி மென்பொருளில் பதிவேற்றம் செய்யும் முறை குறித்து மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று (ஜூன் 11) மதியம் 3:30 மணிக்கு டாக்டர்களுக்கான செயல்விளக்க கூட்டம் நடந்தது.
போலி டாக்டர்களின் மருத்துவச் சான்றிதழை முறைகேடாக பயன் படுத்துவதை தடுக்க 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் லைசென்ஸ் பெற,புதுப்பிக்க ஆன்லைன் முறையில் மருத்துவ சான்றிதழ் பெறும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
சாரதி மென்பொருளில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் பதிவுச்சான்று எண்ணுடன் ஆதார் எண்ணை டாக்டர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தங்களது கிளினிக், மருத்துவமனை விவரங்களை ஒருமுறை பதிவேற்றம் செய்து பெயரை பதிவு செய்யவேண்டும். ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண்ணுக்கு வரும் ஓ.டி.பி எண்ணை அனுப்பினால் மட்டுமே ஆவணங்கள் சரிபார்க்கப்படும். அதன் பின் சாரதி மென்பொருளை பயன்படுத்தி லைசென்ஸ்க்கு விண்ணப்பிப்பவர்களின் மருத்துவச்சான்றிதழை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவர்.
வரும் போது தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் பதிவெண், ஆதார் எண்ணை கொண்டு வரவேண்டும். அலைபேசி: 93848 08395.