அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரியில் வகுப்பு துவக்க விழா
அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரியில் வகுப்பு துவக்க விழா
UPDATED : செப் 04, 2026 04:41 PM
ADDED : செப் 04, 2026 04:43 PM
விழுப்புரம்:
விழுப்புரம் காகுப்பம் அண்ணா பல்கலை அரசு பொறியியல் கல்லுாரியில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்க விழா நடந்தது.
கல்லுாரி டீன் செந்தில் தலைமை தாங்கினார். துறைத் தலைவர் செல்வராஜ் வரவேற்றார். விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., அருளரசு சிறப்புரையாற்றினார்.
இதில், அவர் பேசுகையில், 'மாணவர்கள் தற்போது முக்கியமான வயதில் உள்ளீர்கள். உங்களுக்கு நட்பு முக்கியமா, கல்வி முக்கியமா என்றால் நட்பு தான் முக்கியம். நட்புக்கு தான் திருக்குறள் அதிகமாக உள்ளது.
சரியான நட்பு அமைந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும். கல்லுாரி படிப்பு தான் மாணவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கும். போதை பழக்கத்திற்கு அடிமையாக கூடாது,' என்றார்.
அப்போது, பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முதலாம் ஆண்டு ஒருங்கிணைப்பாளர் கீதா கிருஷ்ணன் நன்றி கூறினார்.
