தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு கலைக் கல்லுாரியில் ஜூலை 3ல் வகுப்புகள்

அரசு கலைக் கல்லுாரியில் ஜூலை 3ல் வகுப்புகள்

அரசு கலைக் கல்லுாரியில் ஜூலை 3ல் வகுப்புகள்


UPDATED : ஜூன் 26, 2024 12:00 AM

ADDED : ஜூன் 26, 2024 09:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 26, 2024 12:00 AM ADDED : ஜூன் 26, 2024 09:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
கோவை அரசு கலைக் கல்லூரியில், முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம்கட்ட பொது கலந்தாய்வு இன்று நடக்கிறது.

அரசு கலைக் கல்லூரியில் உள்ள இளநிலைப் பிரிவுகளின் கீழ் 23 துறைகள் உள்ளன. முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு, 1,433 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு, மே 30ம் தேதி துவங்கப்பட்டது. ஜூன் 10 முதல் 15ம் தேதி வரை துறை வாரியாக, பொது கலந்தாய்வு நடத்தப்பட்டது.

முதல்கட்ட பொது கலந்தாய்வில் 1,142 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதன் மூலம், 80 சதவீத இடங்கள் பூர்த்தியாகி உள்ளன.

இரண்டாம் கட்ட கலந்தாய்வில், மீதமுள்ள 291 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. கலந்தாய்வுகள் நிறைவடைந்த பின், அரசு அறிவுறுத்தலின்படி முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள், ஜூலை 3ம் தேதி துவக்கப்படவுள்ளதாக, கல்லூரி முதல்வர் எழிலி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us