மாணவர்களை ஊக்குவிக்க 'கிளாஸ்மேட்' நிறுவனம் புது பிரசாரம்
மாணவர்களை ஊக்குவிக்க 'கிளாஸ்மேட்' நிறுவனம் புது பிரசாரம்
UPDATED : மே 23, 2025 12:00 AM
ADDED : மே 23, 2025 08:05 PM
சென்னை:
மாணவர்களின் சிந்தனை திறன் மற்றும் கல்வியை ஊக்குவிக்க, கிளாஸ்மேட் நிறுவனம், எஜு கேம்ஸ் இன்பினிட்டி edu Games Infinity என்ற பிரசாரத்தை, 30 நகரங்களில் நாளை துவங்க உள்ளது.
இந்தியாவின் முன்னணி நோட்டு மற்றும் எழுது பொருட்கள் நிறுவனமான, ஐ.டி.சி.,யின் கிளாஸ்மேட் நிறுவனம், கல்வி மற்றும் விளையாட்டை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சியாக, எஜு கேம்ஸ் இன்பினிட்டி என்ற பிரசாரத்தை நாளை துவங்குகிறது. மாணவர்களின் கற்றலை ஊக்குவிக்க, இந்த முயற்சி துவங்கப்பட்டுள்ளது.
இதற்கான பிரசாரம், 30 நகரங்களில் நாளை துவக்கப்படுகிறது. மாணவர்கள், கிளாஸ்மேட் நோட்டு புத்தகங்களை வாங்க வேண்டும்.
அதன் கடைசி பக்கத்தில் உள்ள, க்யூ.ஆர்., கோடை ஸ்கேன் செய்து, தினசரி புதிர்களில் பங்கேற்று, பல்வேறு பரிசுகள் வெல்லலாம். ஹாங்காக் டிஸ்னிலேண்ட் செல்லும் வாய்ப்பையும் பெறலாம். பிரசாரத்தில் செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் பிரக்ஞானந்தா, வைஷாலி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
இது குறித்து ஐ.டி.சி., கல்விப்பிரிவு தலைமை நிர்வாக அதிகாரி விகாஸ் குப்தா கூறுகையில், கற்றல் என்பது மகிழ்ச்சியானதாகவும், ஆர்வம், சிந்தனையை ஊக்குவிக்கும் வகையிலும் இருக்க வேண்டும்.
பிரக்ஞானந்தா மற்றும் வைஷாலியின் சாதனைகள், கவனம், நுட்பங்களை பயன்படுத்தி வெற்றி பெறுவது எப்படி என்பதை எடுத்துக் காட்டுகின்றன. எங்களின் முயற்சி மாணவர்களை ஊக்குவித்து, கூர்மையான சிந்தனையுடன் வளரச்செய்யும், என்றார்.