தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர்கள் வராததால் பூட்டி கிடந்த வகுப்பறை; மாணவர்கள் தவிப்பு

ஆசிரியர்கள் வராததால் பூட்டி கிடந்த வகுப்பறை; மாணவர்கள் தவிப்பு

ஆசிரியர்கள் வராததால் பூட்டி கிடந்த வகுப்பறை; மாணவர்கள் தவிப்பு


UPDATED : நவ 25, 2026 05:35 PM

ADDED : நவ 25, 2026 05:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 05:35 PM ADDED : நவ 25, 2026 05:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:
பெரிய வடுகப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணியாற்றும், இரண்டு ஆசிரியர்களும் விடுப்பில் சென்றதால் காலை, 10:30 மணிக்கு தாமதமாக பள்ளி திறக்கப்பட்டது.

கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பெரிய வடுகப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 21 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியராக கோமதி, உதவி ஆசிரியராக செந்தில்குமார் பணிபுரிகின்றனர்.

செந்தில்குமார் கடந்த ஜூலை மாதம் முதலே, அடிக்கடி விடுப்பு எடுத்து வருகிறார். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, வேறு பள்ளியிலிருந்து மாற்றுப்பணி அடிப்படையில் ஆசிரியர் நியமிக்கப்பட்டு பாடம் நடத்தப்படுகிறது.

இந்நிலையில் தலைமை ஆசிரியர் கோமதி, உடல்நலக் குறைவால் இரண்டு நாட்கள் விடுப்பில் சென்று விட்டார். இந்நிலையில் நேற்று மாணவ, மாணவியர் வந்த நிலையில், பள்ளி ஆசிரியர்கள் இருவர் மட்டுமின்றி, மாற்றுப்பணி ஆசிரியரும் வரவில்லை. வகுப்பறை பூட்டி கிடந்ததால், 21 மாணவர்களும் வளாகத்திலும், சாலையிலும் சுற்றினர்.

இதை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்து, கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காலை, 10:30 மணிக்கு மேல் வேறு பள்ளி ஆசிரியர் ஒருவர் வரவழைக்கப்பட்டு பள்ளி திறக்கப்பட்டது.

இது குறித்து கரூர் மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல் கூறகையில், 'விடுப்பில் சென்றது குறித்து பள்ளி ஆசிரியர்கள் இருவருக்கும் உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.




தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us