முதல்வர் கோப்பை போட்டிகள் ஸ்டான்லி மெட்ரிக் பள்ளி சாதனை
முதல்வர் கோப்பை போட்டிகள் ஸ்டான்லி மெட்ரிக் பள்ளி சாதனை
UPDATED : செப் 21, 2026 04:58 PM
ADDED : செப் 21, 2026 05:00 PM
பாப்பிரெட்டிப்பட்டி:
தர்மபுரி மாவட்ட அளவில், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக் பள்ளி மாணவர்கள், கோ கோ விளையாட்டில் மாணவர்கள் அணி முதலிடமும், மாணவியர் அணி, 2ம் இடமும், சிலம்பத்தில் பெண்கள் பிரிவில், 2ம் இடமும், மேசைப்பந்து, இரட்டையர் பெண்கள் போட்டியில், 2ம் இடமும், வால்வீச்சு போட்டியில், 2 மற்றும் 3ம் இடமும் பிடித்துள்ளனர்.
மேசைப்பந்து போட்டியில், 2ம் இடமும், கேரம் போட்டியில், இரட்டையர் ஆண்கள் பிரிவில், முதலிடமும், இரட்டை பெண்கள் அணி முதலிடமும், ஒற்றையர் ஆண்கள் பிரிவில், 3ம் இடமும் பிடித்து, மொத்தம், 83,000 ரூபாய் பரிசுத்தொகை பெற்றுள்ளனர்.
கேரம், இரட்டையர்களுக்கான போட்டியில், ஆண்கள் பிரிவில் சரவண பாபு மற்றும் ஆகாஷ், பெண்கள் பிரிவில் தனுஷ்யா செங்கொடி, மேசைப்பந்து இரட்டையர் பெண்கள் போட்டியில் சுபத்ரா ஸ்ரீ மற்றும் மிஸ்பா வென்றனர்.
கோ - கோவில் ஆண்கள் அணியில் பிரித்தன், பரணிதரன், அபிஷாந்த், ஹரிதாஸ் சர்வந்த் மற்றும் பெண்கள் அணியில் ஷபானா, சபிதா, இலக்கியா, நிகிதா ஸ்ரீ மற்றும் மோனிகா வால்வீச்சு போட்டியில் தருண் அஜய் ஜோதி மற்றும் ஸ்ரீதர் கைப்பந்து போட்டியில் இனியரசு ஆகியோர், தர்மபுரி மாவட்ட அணி சார்பில், மாநில போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை, பள்ளி தாளாளர் முருகேசன், செயலாளர் பிரு ஆனந்த்பிரகாஷ் ஆகியோர் பாராட்டினர்.
