தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய வருவாய் வழித் தேர்வு மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு

தேசிய வருவாய் வழித் தேர்வு மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு

தேசிய வருவாய் வழித் தேர்வு மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு


UPDATED : நவ 07, 2026 01:34 AM

ADDED : நவ 07, 2026 01:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 01:34 AM ADDED : நவ 07, 2026 01:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்:
நாமக்கல்லில், தேசிய வருவாய் வழித் தேர்வில் பங்கேற்க மாணவ, மாணவியருக்கான சிறப்பு பயிற்சி வகுப்பை கலெக்டர் பார்வையிட்டார்.

தேசிய வருவாய் மற்றும் திறன் வழித்தேர்வு மூலம் வழங்கப்படும் கல்வி உதவிதொகை திட்டமானது தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 8ம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து பள்ளிகளுக்கும் வினாத்தாள் அனுப்பப்பட்டு, இது வரை 10க்கும் மேற்பட்ட தேர்வு நடந்துள்ளன. ஒவ்வொரு ஒன்றியத்திலும் சிறப்பு பயிற்சி மையங்கள் அமைத்து, தேர்வுக்கான பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

இது வரை நடத்தி முடிக்கப்பட்ட தேர்வுகளின் சராசரி மதிப்பெண் அடிப்படையில், அதிகபட்ச மதிப்பெண்கள் பெற்ற முதல், 55 மாணவ, மாணவியர், 15 ஒன்றியங்கள் வாரியாக மொத்தம், 825 மாணவர்கள் தேர்வில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இப்பயிற்சி வகுப்பில் கருத்தாளர்களாக, 120 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு ஒன்றியத்திற்கும், 8 ஆசிரியர்கள் செயல்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு பயிற்சி மையத்திலும் நவீன கரும்பலகை மூலம் கற்பித்தல் பயிற்சி நடந்து வருகிறது.

நாமக்கல் அனைவருக்கும் கல்வி இயக்க மையத்தை, கலெக்டர் மதுபாலன் நேற்று பார்வையிட்டார். தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியருக்கு மாதந்தோறும் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 1,000 ரூபாய் உதவித்தொகை கிடைக்கும். அனைவரும் சிறப்பாக பயிற்சி பெற்று தேர்வில் வெற்றியடைய வேண்டும் என கலெக்டர் வாழ்த்தினார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாதவன், மாநகராட்சி கமிஷனர் செல்வபாலாஜி, டி.எஸ்.பி., ராஜேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us