நீட் மறு தேர்வுக்கு பயிற்சி வகுப்பு துவக்கம் மையத்தில் தங்கி படிக்கவும் ஏற்பாடு
நீட் மறு தேர்வுக்கு பயிற்சி வகுப்பு துவக்கம் மையத்தில் தங்கி படிக்கவும் ஏற்பாடு
UPDATED : மே 24, 2026 12:32 PM
ADDED : மே 24, 2026 12:38 PM
ஈரோடு:
தேசிய தேர்வு முகமை சார்பில் நாடு முழுவதும் கடந்த, 3ல் நீட் தேர்வு நடத்தப்பட்டது. வினாத்தாள் வெளியானதால் தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஜூன், 21ல் நீட் மறுதேர்வு நடக்கிறது.
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, நீட் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில் நேற்று துவங்கியது.
இதில், 25 மாணவ மாணவியர் பங்கேற்றனர். விருப்பமுள்ளோர் தங்கி படித்து வருகின்றனர். தினமும் காலை, 09:00 மணி முதல் மாலை, 05:00 மணி வரை, ஜூன் 16 வரை நீட் பயிற்சி வகுப்பு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நீட் தேர்வு சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இதற்கு, 425 பேர் பதிவு செய்து உள்ளனர். இவர்கள் வீட்டில் இருந்தும், பயிற்சி மையத்தில் தங்கியும் படிக்கலாம்.
பெருந்துறை அரசு மாதிரி மேல்நிலை பள்ளிக்கூடத்தில் (எலைட்) பயிற்சி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. தொலைதூரத்தில் இருந்து வருவோருக்கு, பயிற்சி மையத்திலேயே தங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு கூறினர்.
