UPDATED : ஏப் 16, 2024 12:00 AM
ADDED : ஏப் 16, 2024 10:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்:
விருதுநகரில் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி நடந்தது. மாவட்டத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரி தொழில் நுட்ப கல்லூரிகளில் பயிலும் 150 க்கும் மேற்பட்ட முதல் முறை, இளம் தலைமுறை வாக்காளர்கள் பங்கேற்றனர்.
தேர்தல் அலுவலர் ஜெயசீலன் பேசியதாவது: வெளிப்படையான, நியாயமான முறையில் மக்களுடைய பிரதிநிதியை தேர்ந்தெடுக்கும் முறைக்கு பெயர்தான் தேர்தல். இந்த கடமையை எல்லோரும் ஆற்ற வேண்டும்.
பணம் பரிசுப் பொருள்கள் பெற்று ஓட்டு செலுத்துவது, வன்முறை சூழல்களை ஏற்படுத்தி மக்களை வாக்களிக்க விடாமல் தடுப்பது, தவறான தகவல்களை பரப்புவது போன்ற மூன்று சவால்களை இந்திய தேர்தல் ஆணையம் எதிர்கொள்கிறது. அதனை தடுப்பதற்கான பல்வேறு கண்காணிப்புகள், தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன, என்றார்.