கோவை அரசு கலை கல்லுாரியில் வரும் 30ம் தேதி முதல் கலந்தாய்வு
கோவை அரசு கலை கல்லுாரியில் வரும் 30ம் தேதி முதல் கலந்தாய்வு
UPDATED : மே 28, 2024 12:00 AM
ADDED : மே 28, 2024 10:08 AM

கோவை:
கோவை அரசு கலை கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு மே 30ம் தேதி முதல் துவங்கவுள்ளதாக, முதல்வர் உலகி தெரிவித்துள்ளார்.
இக்கல்லுாரியில், இரண்டு சுழற்சிகளின் கீழ், 23 பாடப்பிரிவுகளில், 1,433 மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர். பிளஸ்2 மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு விதிமுறைகளின் படி மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.
கலந்தாய்வு, சிறப்பு பிரிவுகளுக்கு வரும், 30ம் தேதி காலை 9:00 மணிக்கு நடைபெறவுள்ளது. 10ம் தேதி வணிகவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆகிய பிரிவுகளுக்கு நடக்கிறது.
பாடவாரியாக கலந்தாய்வு அட்டவணை, தரவரிசை பட்டியல் www.gacbe.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் அனைத்து கல்வி, இடஒதுக்கீடு சார்ந்த சான்றிதழ்களை எடுத்து வர வேண்டும் என்கிறார் முதல்வர் உலகி.
அவர் கூறுகையில், அனைத்து விபரங்களையும், மாணவர்கள் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். தரவரிசையில் முன்னணியில் உள்ள மாணவர்கள், முதல்கட்ட கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். பிற மாணவர்கள், இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்றார்.